[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
உலகம் 30 Oct, 2017 05:08 PM

21 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோடிக் உடை மூலம் நடமாடும் விபத்தில் சிக்கிய நபர்

accidental-person-walk-with-robotic-dress-help

போர்ச்சுகல்லில் விபத்தில் சிக்கி 21 ஆண்டுகளாக நடமாட முடியாமல் முடங்கிக் கிடந்த பத்திரிகையாளர் ரோபோடிக் உடையின் உதவியுடன் மீண்டும் சக மனிதர்களைப் போல நடைபோட தொடங்கியுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் அன்ட்ரே காலிப் கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் விடுமுறையை கழிக்க கிரீஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக மலை மீதிருந்து உருண்டு விழுந்த விபத்தில் காலிப்பின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி செயல்படாமல் முடங்கிப் போனது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காலிப், சக மனிதர்களைப் போல மீண்டும் நடமாட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்காக இங்கிலாந்துக்கு சென்று தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். எனினும் கால் மூட்டுகளை மடக்குவதில் அவருக்கு தொடர்ந்து சிரமம் நீடித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் ஹீட்க்ஸ் என்ற நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக உடையை வடிவமைத்திருப்பதை கேள்விப்பட்ட காலிப், அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதையடுத்து அந்த உடையின் உதவியுடன், சக மனிதரைப்போல் நடக்கவும், அமரவும் அவரால் முடிகிறது. இதன்மூலம் அவரது 21 ஆண்டுகால கனவு நிஜமாகி இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close