[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதிப்பு
  • BREAKING-NEWS நாகை: கோடியக்கரை அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
  • BREAKING-NEWS கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியில் இருந்தபடியே பார்வையிட்டார் கமல்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம்: ஹர்தோய் பகுதியில் வயிலில் தன்னை கடித்த பாம்பை கடித்தே கொன்றார் விவசாயி

பால் குடிக்காமல் அடம்பிடித்த குழந்தை: தெருவில் தவிக்கவிட்ட கொடூர அப்பா!

father-gives-severe-punishment-to-his-daughter

அமெரிக்காவி‌ன் டெக்சாஸ் மாகாணத்தில் பால் குடிக்க மறுத்த குழந்தையை தண்டிக்கும் ‌வகையில், வீட்டுக்கு வெளியே தந்தை விட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அந்த குழந்தை மாயமானதால் தந்தை மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏ‌ற்பட்டுள்ளது.

அமெரிக்காவி‌ன் டெக்சாஸை சேர்ந்த வெல்சே மேத்யூ என்பவர், இந்தி‌யாவை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஷெரீன் என்ற 3 வயது இந்திய குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 7-ம் தேதி பால் குடிக்க மறுத்து ஷெரீன் அடம்பிடித்ததால், ஆவேசமடைந்த தந்தை மேத்யூ, குழந்தை ஷெரீனை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று விட்டுவிட்டு, தான் மட்டும் திரும்பி வந்துவிட்டார். அதன்பின் மாயமான அந்த‌ குழந்தையை கடந்த ஒரு வாரமாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.‌

இதனிடையே அதிகாலை 3 மணிக்கு குழந்தை மாயமான நிலையில், காலை 8 மணி வரை காவல்துறையிடம் மேத்யூ‌ புகார் அளிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் மேத்யூ ‌மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close