[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
உலகம் 15 Oct, 2017 01:31 PM

ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்: 5-வது நடிகை பகீர்!

british-actor-lysette-anthony-becomes-fifth-woman-to-accuse-harvey-weinstein-of-rape

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது, பிரிட்டீஷ் நடிகை லைசைட் அந்தோணி பாலியல் புகாரை இன்று கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கர் விருது பெற்ற இவர், கடந்த 30 வருடங்களாக 15-ம் மேற்பட்ட நடிகைகளை பாலியல் வன்முறை செய்ததாக செய்திகள் வெளியானது. இவரது திரைமறைவு வாழ்க்கையை, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டதை அடுத்து பல ஹாலிவுட் நடிகைகள், வெய்ன்ஸ்டீனின் பாலியல் லீலைகளை தைரியமாக வெளியே கூறினர். அதில் முக்கியமானவர் பிரபல நடிகையான ஏஞ்சலினா  ஜோலி. 

அவரும் நடிகை க்வெயினத் பால்ட்ரோவும் அளித்துள்ள பேட்டியில், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதே போல இத்தாலிய நடிகை ஏசியா அர்ஜெண்டா, நடிகைகள் காரா டெலவிங், ரோஸ் மேக்கோவன் ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர். 

இந்நிலையில் லைசைட் அந்தோணி என்ற பிரட்டீஷ் நடிகையும் வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 55 வயதான இந்த நடிகை, தனது இளம் வயதில் பட வாய்ப்புக்காக லண்டனில் அவரைச் சந்தித்ததாகவும் பாதி ஆடையை மட்டுமே அணிந்திருந்த அவர், கட்டிப்பிடிக்க முயன்றதாகவும் இதை எதிர்பார்த்திருந்ததால் அவரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் நடிகையை பின் தொடர்ந்த வெய்ன்ஸ்டீன், அவர் வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் அங்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும் கடைசியில் போராட முடியாமல் விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் நடிகை தெரிவித்துள்ளார். வெய்ன்ஸ்டீன் மீது 5 வது நடிகை கொடுத்த புகார் இது. மேலும் பல நடிகைகள் புகார் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பு, வெய்ன்ஸ்டீனை அந்த அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரை விட்டு பிரியப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close