[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
உலகம் 12 Oct, 2017 10:01 PM

மேற்குலகிற்கு பயங்கரவாத இயக்கம்: காஸா மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்!

hamas-is-the-government-for-gaza-people-terrorists-for-western-countries

பாலஸ்தீன விவகாரத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பது பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கம்தான்.

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம், 1980-களின் இறுதியில் தொடங்கிய முதலாவது பாலஸ்தீன எழுச்சியின்போது ஷேக் யாசின் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் தலைவர் கலேத் மேஷல். மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு இது. இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தின் தொடக்க சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 1990களில் இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவெடிப்புகளையும் தற்கொலைப்படைத் தாக்குதல்களையும் இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருக்கின்றன. ஆனால், தொடக்க காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைகளை நடத்திய ஹமாஸ் இயக்கம், பிற்காலத்தில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. இதற்கு ஆதாரமாக இருப்பது 2006-ம் ஆண்டு நடந்த பாலஸ்தீனப் பொதுத் தேர்தல். இந்தத் தேர்தலில் யாசர் அராபத்தால் உருவாக்கப்பட்ட ஃபதா இயக்கத்தை எதிர்த்துக் களமிறங்கியது ஹமாஸ். யாரும் எதிர்பார்க்காத வகையில், ஃபதாவை வீழ்த்தி பாலஸ்தீனத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. கூட்டாட்சி அமைக்கப்பட்டது. இந்த அமைதிச்சூழல் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2007-ம் ஆண்டில் ஃபதா இயக்கத்துடனான கருத்து வேறுபாடு மோதலாக வெடித்தது. மோதல் பெரும் ஆயுதச் சண்டையாக உருவாகி, இரு இயக்கங்களும் நிரந்தரமாகப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மேற்குக் கரையில் இருந்து ஹமாஸ் இயக்கம் விரட்டப்பட்டது.

புவியியல் ரீதியாக மேற்குக் கரையில் இருந்து தனித்து இருக்கும் காஸா பிராந்தியத்துக்குள் ஹமாஸ் முடங்கியது. இங்கிருந்தபடியே, கடந்த 6 ஆண்டுகளில் இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான முறை ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் இயக்கம் நடத்தியிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ராணுவ பலமே இதுபோன்ற ராக்கெட்டுகள்தான். இஸ்ரேலின் படைவலிமைக்கு முன்னால், இது ஒன்றுமேயில்லை. மேற்குலகம் முழுவதுமே பயங்கரவாத இயக்கமாகப் பார்த்தாலும், காஸா பிராந்திய மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close