[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel-prize-for-economics-2017-announced

2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன் இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்ததார். அதன்படி 2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஹெச்.தாலர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வின் முன்னோடியாக திகழ்ந்தவர் ரிச்சர் ஹெச்.தாலர். பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார்.

இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பரிந்துரையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், நாடே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு அப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close