[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
  • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
  • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
  • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
  • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
உலகம் 03 Oct, 2017 05:36 PM

தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் கைது

vijay-mallya-arrested-in-london

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, அதனை தொழிலதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. எனவே அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவை, கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில்  மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் விஜய் மல்லையாவிற்கு பிணை பெறுவது தொடர்பாக அவரின் அதிகாரிகள் உடனடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை விஜய் மல்லையா இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையை சந்திப்பார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close