[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
உலகம் 03 Oct, 2017 11:35 AM

இ-சிகரெட்டுகளால் புகையிலை மரணங்கள் குறையும்?

millions-of-deaths-can-be-delayed-if-people-switch-to-e-cigarettes-study

இ-சிகரெட்டுகள் பயன்பாட்டினால் புகையிலை நோய்களால் ஏற்படும் மரணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகையிலைப் பொருட்கள் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும், பிராந்தியத்திற்கும் தகுந்தாற்போல் மாறுப்பட்ட புகையிலை பொருட்கள் அந்தந்த பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு மரணங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.

இந்த நிலையில், உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இ-சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. உடலுக்கு சுவையுடன் நிகோடின் மற்றம் பிற வேதிப்பொருள்களைத் தரும் சிறிய சாதனங்களையே இ-சிகரெட்டுகள் ஆகும். இவை பேட்டரியால் இயங்கும் சிறிய சாதனங்கள். எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை வேப் பென், இ-ஹூக்கா, ஹூக்கா பென் அல்லது வேப் பைப் என்றும் கூறப்படுகிறது. இவை பார்ப்பதற்கு, புகையிலையைக் கொண்ட பழைய சிகரெட், சுருட்டு போன்றே காட்சியளிக்கும்.

சாதாரண சிகரெட்டுகளை நாம் பற்ற வைக்க வேண்டும், அவை புகையை வெளியிடும், ஆனால் இந்த இ-சிகரெட்டுகளை பற்ற வைக்கவும் வேண்டியதில்லை. இவை மீண்டும் நிரப்பக்கூடிய டேங்குகளில் இருந்து நீராவியை வெளியிடுகின்றன. இந்த இ-சிகரெட்டுகள் புகையிலையால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்கும் பயணத்தில், ஒரு சமீபத்திய தொழில்நுட்பம் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இருப்பினும் இ-சிகரெட்டுகளால் நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றது.

இந்தநிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இ-சிகரெட் பயன்படுத்தியவர்கள் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் இருந்து தப்பித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வெளியான தகவலின்படி, இ-சிகரெட்டுகள் மூலம் 5 சதவீதம் தான் பாதிப்பு உள்ளது. இதன் மூலம் 2100-ம் ஆண்டிற்குள் 66 லட்சம் பேரின் மரணத்தை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் புகையிலை முறைக்கு மாற்று இந்த புதிய வகை இ-சிகரெட்டுகள் தான் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் உறுதி செய்யவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close