[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வெளிநாடு வாழ் இந்தியர்‌கள் மகிழ்ச்சி முக்கியம்:இந்திய தொழிலாளர்கள் மத்தியில் மோடி‌ பேச்சு

pm-modi-meets-l-t-workers-in-riyadh-saudi-arabia

இந்தியாவில் மனிதவளமும், ஆற்றலும் நிரம்பியிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மூன்று நாடுகள் அரசு முறை பயணத்தின் இறுதிகட்டமாக, சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, ரியாத் நகரில் பல்வேறு சமயத் தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர், சவூதியில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

உலகில் இந்தியர்களுக்கு எங்கு பிரச்னை என்றாலும், அவர்களுக்கு உதவு தம‌து அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக மோடி தெரிவித்தார். அவர்களது பிரச்னையை தீர்க்க, வெளியுறவு அமைச்சகமும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வலியை தான் உணர்ந்திருப்பதாகவும், அவர்களது மகிழ்ச்சியிலேயே தமது நிம்மதி அடங்கியிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

பின்னர் அவர் தொழிலாளர்களுடன் இணைந்து உணவருந்தினார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள புகழ்பெற்ற மாஸ்மேக் கோட்டையையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். இன்று சவூதி மன்னரை சந்தித்து இரு தரப்பு நல்லுறவு குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்பின்னர், இந்தியா - சவூதி இடையே எரிபொருள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close