[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

காபூல் நகரில் ராக்கெட் தாக்குதல்?

kabul-rocket-attack-on-the-city

காபூல் நகரில் ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அருகே ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் ஆப்கானிஸ்தான் சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் உள்ள ராணுவ பிரிவு அருகே ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன எனவும் இந்த தாக்குதலால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஜீப்தனீஷ் தெரிவித்துள்ளார்.

காபூல் மாவட்டத்தில் உள்ள டே சப்ஸ் பகுதியில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டு இருக்கலாம் என்று காபூல் விமான நிலைய தலைவர் யாகூப் ரசோலி தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.36 மணிக்கு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.விமானப்படையின் மேற்கூரை மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முற்றிலும் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, காபூல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close