[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

மெ‌க்சிகோவுக்காக நி‌தி திரட்டும் நடிகர், நடிகைகள்

celebrities-asking-for-ang-giving-donations-to-help-mexico-after-earthquake

நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மெக்சிகோ மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட ப‌ல்வேறு நாடுகளைச் சே‌ர்ந்த நடிகர், நடிகைகள் முன் வந்துள்ளனர்.

மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மி‌கப் பெரிய பாதிப்பு ஏற்ப‌ட்டது. இதில் சுமார் 325 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கட்டடங்கள் தரைமட்டமானதால், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்‌. நாசாவின் இதய துடிப்பை கண்டறியும் கருவியின் உதவியுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்நிலையில் துயரத்தில் சிக்கி இருக்கும் மெக்சிகோ மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மெக்‌சிகோவைச் சேர்ந்த நடிகர்கள் கார்சியா பெர்னல், டிகோ லுனா, கொலம்பிய பாடகர் மலுமா, அமெரிக்க நடிகை இவா லான்கோரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 1 ஆம் தேதி மிகப் பெரிய‌ இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் கணிசமான தொகையை மெக்சிகோ மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close