[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
உலகம் 26 Sep, 2017 01:09 PM

41 வயதில் இவ்வளவு இளமையா?: சந்தேகத்தால் விமானத்தில் பயணிக்க தடை

young-at-the-age-of-41-suspended-for-a-flight-to-travel

41 வயதில் இவ்வளவு இளமையா? என்ற சந்தேகத்தில் பெண் ஒருவரை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நட்டாலியா டெசன்கு என்ற பெண்மனி துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறும்போது, “நீங்கள் கொண்டுவந்த பாஸ்போர்டில் வயது 41 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பாஸ்போர்டில் உள்ள புகைப்படத்தை விட 20 வயது இளமையாக தெரிகிறீர்கள், எனவே நீங்கள் வேரொருவருடைய பாஸ்போர்டில் பயணிக்க முயற்சி செய்கிறீர்கள் என்ற சந்தேகத்தினால் தடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்மணி கூறுகையில், “என்னுடைய இந்த இளமைத் தோற்றத்தால் பலரும் என்னை புகழ்ந்துள்ளனர், ஆனால் அந்த தோற்றமே எனக்கு ஆபத்தாய் அமையும் என நான் எதிர்பார்க்க வில்லை” என்று அவர் கூறினார். இந்த அழகு தோற்றத்தால் நட்டாலியா பல ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்டாலியா, தனது அழகு ரகசியத்தை பற்றி தெரிவிக்காத போதிலும் சைவ உணவுப் பழக்கம், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் தான் அவருடைய அழகின் ரகசியம் என அவரது ரசிகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இளமை தோற்றத்தால் நட்டாலியா பல பாராட்டுக்களை பெற்றாலும் இந்த சம்பவம் அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close