[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

ஜப்பான் வானில் மீண்டும் ஏவுகணையை பறக்கவிட்ட வடகொரியா

north-korea-fires-missile-over-japan

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் ஹோக்கைடோ தீவு வழியாக பாய்ந்து சென்றது. சுனான் விமானத் தளத்தில் இருந்து அந்நாட்டின் நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரியாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 17 நிமிடங்கள் வானில் பறந்து ஹாக்கைடோ தீவை கடந்து சுமார் 1200 மைல் தொலைவில் பசுபிக் கடலில் விழுந்தது.

மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக ஜப்பான் வழியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தங்களது அணுகுண்டு தாக்குதலில் ஜப்பான் நாட்டின் நான்கு முக்கிய தீவுகள் கடலில் மூழ்கடிக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்த அடுத்த நாளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜப்பான் அதிபர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் தொடர்ச்சியாக பரிசோதித்து வருகின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close