[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்
 • BREAKING-NEWS நாட்டில் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி: மத்திய அரசு அதிகாரிகள்
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
 • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
உலகம் 12 Sep, 2017 09:38 PM

மனிதாபிமானத்தோடு செயல்பட்டால் பாதுகாப்புக்கு சிக்கல்: மத்திய அரசு

india-strongly-rejected-the-criticism-by-the-un-human-rights-over-its-handling-of-rohingya-muslim-refugees

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. 

மியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அவர்கள் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்கின்றனர். கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து நேற்றுவரை இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள், அவர்கள் இந்திய சட்டத்தின்படி நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி இருந்தார். இதனையடுத்து, ரோஹிங்கியா இஸ்லாமியர்கள், ஜம்மு-காஷ்மீர், பத்திரிக்கையாலர் கவுரி லங்கேஷ் கொலை உள்ளிட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப இந்தியா முடிவெடுத்திருப்பது குறித்து விமர்சனங்களை முன் வைத்தத ஐ.நா. சபை சர்வதேச அளவிலான அகதிகள் சட்டதிட்டத்தை மதித்து நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த நிலையில்தான், மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டு விடும் என்று மத்திய அரசு  கூறியுள்ளது. ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சந்தர், ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close