[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு: தென்கொரியாவில் ஏராளமானோர் போராட்டம்

us-adds-launchers-to-thaad-as-dozens-hurt-in-south-korea-protests

தென்கொரியாவின் சியாங்ஜு நகரில் அமெரிக்காவின் தாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். 

வடகொரிய ஏவுகணைகளைத் தடுக்கும் வகையிலான தாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை தென் கொரியா தொடர்ந்து நிறுவி வருகிறது. தென்கொரியாவின் சியாங்ஜு நகரில் அமெரிக்காவின் தாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதற்காக பழைய கோல்ப் மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ராடார் உள்ளிட்ட கருவிகள் இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 8 ஆயிரம் காவல்துறையினர் இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சியாங்ஜு நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அதிக சக்தி கொண்ட ரேடார் கருவிகள் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close