[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் 'ராக்'?

dwayne-the-rock-johnson-may-run-for-us-president-in-future

ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ‘தி ராக்’ என்றழைக்கப்படும் டிவைன் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதனால், தமிழகத்தைப் போலவே அமெரிக்காவிலும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் ராக்கிடம், நீங்கள் ஏன் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்குப் பதில் அளித்த ராக், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்வி மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருப்பதாகவும், அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நிச்சயம் கால்பதிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருகட்சி ஆட்சி நடைபெறும் அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிலும் ராக்குக்கு நல்ல மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close