[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
உலகம் 28 Aug, 2017 07:20 PM

ஊழல்‌ விசாரணை அதிகாரியை வெளியேறச் சொன்ன அதிபர்

prosecutors-target-guatemala-president-over-campaign-financing

கவுதமலாவில் அதிபர் தனக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஐ.நா.வின் ஊழல் தடுப்பு ஊழல்‌ விசாரணை அதிகாரியை வெளியேறச் சொன்னதற்கு, உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆணையரை நாட்டை விட்டு வெளியேறும்படி அதிபர் ‌ஜிம்மி மாரேலஸ் உத்தரவிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவரது உத்தரவுக்கு கவுதமாலா உயர்நீதிமன்றம்‌ இடைக்கால தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஜிம்மி மாரேல்ஸ், ஊழல் தடுப்பு ஆணையரை வெளியேறும்படி பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்தினார். வெளியுறவு கொள்கையை காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது எனவும் பேசினார். இந்நிலையில் தான் செய்த ஊழலை மறைக்கவே அதிபர் ஜிம்மி இந்த உத்தரவை பிறப்பித்தார் என‌க் கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் கவுதமாலா நகரில் ‌ஒன்று கூடிப் போராட்டம் நடத்தினர்.

2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, ஜிம்மியின் பரப்புரைக்காக பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஜிம்மி தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close