சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கேமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்கவிட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 21-ஆம் தேதி தென்பட இருக்கும் முழுச் சூரிய கிரகணத்தைப் படம் பிடிப்பதற்காக அதிக உயரத்தில் பறக்கும் பலூன்களைப் பயன்படுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் நாசாவுடன் மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் 50 பலூன்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல் முறையாக இந்தக் காட்சி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது. சூரிய கிரகணத்தின் நிழலானது ஓரிகன் மாநிலத்தில் இருந்து தெற்கு கரோலினா மாநிலத்தை நோக்கி மணிக்கு சுமார் 2400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு