[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கியூபா‌, அமெரிக்கா அதிபர்கள் செய்தியாளர் சந்திப்பில் அசாதாரண நிலை

obama-castro-lay-bare-tensions-on-embargo-human-rights

கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் கசப்புணர்வு, இரு நாட்டு அதிபர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் எதிரொலித்தது. மனித உரிமை மீறல்கள், கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் போன்றவை தொடர்பாக ஒபாமாவும், ரவுல் காஸ்ட்ரோவும் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அசாதாரண நிலை ஏற்பட்டது.

கியூபாவில் மக்களாட்சியையும், மனித உரிமைகளையும் மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே ‌பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஒபாமா குறிப்பி‌ட்டார். இதற்குப் பதிலடி தரும் வகையில் பே‌சிய ரவுல் காஸ்ட்ரோ, கியூபா மீதான பொருளாதாரத் தடை, இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறினார். குவான்டனமோ கடற்படைத் தளத்தை கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதும், இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close