[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைகிறது?
  • BREAKING-NEWS ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
  • BREAKING-NEWS 300 ரன்களை விளாசுவார்கள் என்று நினைத்தோம்: கோலி
  • BREAKING-NEWS சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததாக கூறப்படும் வீடியோ வெளியானது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
உலகம் 09 Aug, 2017 05:41 PM

கேள்விக்குறியாகும் எதிர்காலம்: போரை விட கொலை, தற்கொலைகளே அதிகம்..!

future-of-the-question-murder-more-than-war-suicides-too-much

போர்ச் சூழலில் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தத்தை விட கொலையும் தற்கொலையுமே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள 22 நாடுகளில் கொலை மற்றும் தற்கொலையால் 14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 25‌ஆண்டுகளில் தற்கொலை 100 சதவீதமும், கொலை 152 சதவீதமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெருகும் வன்முறை கலாச்சாரத்தால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஒரு தலைமுறையையே அந்தந்த நாடுகள் இழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நகர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளை தற்போதுள்ள போர் சூழலில் இருந்து மீட்டெடுக்காவிட்டால் அந்த நாடுகளுக்கு எதிர்காலம் என்பதே இல்லாமல் போகும் எனவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close