[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
 • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
உலகம் 08 Aug, 2017 01:16 PM

சிறுவனின் கால்களை பதம்பார்த்த மர்மப் பூச்சிகள்!

australian-teen-s-feet-bloodied-by-mystery-sea-creatures

பீச்சுக்குச் செல்கிறீர்கள். ஜாலியாகச் சுற்றிவிட்டு கடலுக்குள் கொஞ்ச நேரம் காலை நனைத்தால் என்னவாகும்? கடல் அலை காலில் மோதும். பிறகு ஈரமணல் கால்களை அப்பியிருக்கும். ஆனால், மெல்போர்ன் பீச் அருகே கடலுக்குள் கால்களை நனைத்த சிறுவனுக்கு கிடைத்தது பகீர் அனுபவம்.

மெல்போர்னைச் சேர்ந்த சாம் கனிஸாய்க்கு வயது 16. கால்பந்து விளையாடி விட்டு வந்த சாமுக்கு கடலில் காலை நனைக்க ஆசை. அதே போல செய்தார். அரை மணி நேரம் கழித்து கரைக்குத் திரும்பினால் இரண்டு கால்களிலும் ரத்தம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. 

’வலிக்காமலா ரத்தம் வருது?’ என்று சாம் கால்களைப் பார்த்தபோது திடீரென்று வலி விண்ணென்று தெறித்திருக்கிறது. வீட்டுக்கு ஓடிய சாம், அப்பா ஜராடிடம் சொன்னார். அவர் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கடலுக்குள் மகனின் கால்களை கடித்தது எது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

மகன் கடலில் இறங்கிய இடத்தில் கொஞ்சம் இறைச்சியை போட்டு, சிறு வலையை வீசினார். சிக்கியது சிறு சிறு பூச்சிகள். அதை அப்படியே வீடியோ எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டார். அது என்ன பூச்சி என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த மர்மப் பூச்சி பற்றி ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எல்லாரும் சொல்வது, ‘இதுக்கு முன்னால இப்படியொரு பூச்சியை பார்த்ததே இல்லை’ என்பதை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close