[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
உலகம் 03 Aug, 2017 08:01 PM

ஏலியன்களிடமிருந்து பூமியை பாதுகாக்க ஆளெடுக்கிறது நாசா.... சம்பளம் 1.87 லட்சம் டாலர்

nasa-hiring-full-time-planetary-protection-officer-top-7-things-know-about-this-alien-combating

பூமியை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரியை நாசா நியமிக்க உள்ளது. அவருக்கு 187000 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்க உள்ளது.

வேற்றுகிரகவாசிகளின் பாதிப்புகளிலிருந்து பூமியை பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உள்ளது நாசா. கிரக பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளவர், வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கவும், அதேபோல மனிதர்களால் வேறு கிரகங்கள் மற்றும் நிலவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அவருக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது என நாசா கூறியுள்ளது.

கிரக பாதுகாப்பு அதிகாரியின் வேலைகள்:

விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியிலிருந்து அனுப்பப்படும் மனிதர்கள் மற்றும் ரோபோ எந்திரங்கள் மூலம் பூமியைச் சேர்ந்த உயிரினங்கள் வேறு கிரகங்களுக்கோ அல்லது நிலவுக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல வேறு கிரகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் மீண்டும் பூமிக்கே திரும்பும் விண்கலன்கள், ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக, வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் நாம் மும்மரமாக ஆய்வு மேற்கொண்டு வரும் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால் அங்கு உயிரினங்கள் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகையால் செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பும் விண்கலன்களில் வேற்றுகிரக உயிரினங்கள் இருக்கிறதா என்று பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல பூமியில் இருந்து செல்லும் மற்றும் பூமிக்கு திரும்பி வரும் அனைத்து விண்கலன்களையும் பாதுகாப்பு அதிகாரி சோதனையிட வேண்டும்.

இந்த வேலைக்கான தகுதிகள்:

கிரக பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு தேர்தெடுக்கப்படும் நபர், ஒரு அரசாங்கத்தின் ராணுவம் அல்லாத உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். கணிதம், பொறியியல் அல்லது உயிரினங்கள் குறித்த அறிவியல் தொடர்பான பாடத்தில் உயர்கல்வி முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டும், அதிகமாக படிக்க, எழுத வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேம்பட்ட அறிவுடன் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் நாசா கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close