[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உலகம் 03 Aug, 2017 05:29 PM

ஏமனில் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: சேவ் த சில்ட்ரன் அமைப்பு தகவல்

risk-of-death-of-2-lakh-children-in-yemen-save-the-children-s-information

ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 2 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கும் அபாயம் உள்ளதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, ஏராளமானோர் பட்டினியால் தவிக்கிறார்கள். சுகாதார சீர் கேட்டால் அவர்கள் வசிக்கும் பகுதியில் காலரா நோய் பரவியது. இதில், ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். தொடர்ந்து காலரா நோய் பரவிய வண்ணம் உள்ளது.

ஆனால், மக்கள் பட்டினியால் வாடுவதால் அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, காலரா உள்ளிட்ட எந்த நோய் தாக்கினாலும் அதை எதிர்த்து போராடும் அளவுக்கு அவர்களுடைய உடல்நிலை இல்லை. இதில், குழந்தைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பட்டினி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழப்பை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச குழந்தைகள் அமைப்பான சேவ் த சில்ட்ரன் சமூக அமைப்பு கூறியுள்ளது.

இவ்வாறு 2 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது. எனவே, சர்வதேச சமுதாயங்கள் ஏமன் நாட்டு குழந்தைகளை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close