[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
உலகம் 02 Aug, 2017 09:03 PM

இந்தியாவுக்கு கற்பனையாகவாவது ஒரு எதிரி வேண்டும்... சீன ஆய்வாளர் கருத்து

india-created-chinese-threat-to-cover-up-internal-failings-claims-beijing-daily

இந்தியாவிற்கு உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப கற்பனையாகவாவது ஒரு எதிரி வேண்டும் என சீன ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெஸ்ட் நார்மல் பல்கலைக்கழகத்தில் இந்தியா குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர் ஷிங்சன். "இவர் ஸ்டேட்ரன் குலோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர், இந்தியாவிற்கு பொதுவாக ஒரு எதிரி வேண்டும், அந்த எதிரி ஒரு கற்பனையாகவாவது இருக்க வேண்டும். பல்வேறு மதங்கள், மொழிகள், பல நாட்டினர் என இத்தனை முரண்பாடுகளும் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. இந்த முரண்பாடுகளிலிருந்து விலக்கி, மக்களை திசை திருப்ப இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஒரு எதிரி தேவை" என்று கூறியுள்ளார்.

"இந்தியாவின் முன்னாள் பரம எதிரியான பாகிஸ்தான் இதற்கு போதுமானதாக இல்லை. ஏனென்றால் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்துவிட்டது. இந்தியா, சீனா இடையிலான பெரிய அளவிலான எல்லைகள் சர்ச்சைக்குரியவையாக உள்ளன. மேலும் இரு நாடுகளிடையே 1962-ம் ஆண்டு நடந்த போர் உள்ளிட்டவை, இயற்கையாகவே பாகிஸ்தானின் பரம எதிரி அந்தஸ்தை சீனா அடைய போதுமானதாக உள்ளது" என்று கூறியுள்ள ஷிங்சன், "இந்தியா டோக்லாம் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா படைகளை திரும்பப் பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையாகவே சீனா இந்தியாவை மிரட்டுகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "சிக்கிம் மாநிலத்தின் சிலிகுரி என்ற பகுதி வடகிழக்கு மாநிலங்களை, இந்தியாவுடன் இணைக்கும் ஒரு ’கோழிக் கழுத்து’ போன்று வரைபடத்தில் தெரிகிறது. ராணுவம் மற்றும் புவியியல் பார்வையில் இந்தப் பகுதியை கழுத்து என்று கூறுவார்கள். இந்தப் பகுதி வெறும் 27 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. சிலிகுரி பகுதியை சீன ராணுவம் கைப்பற்றினால், இந்திய ராணுவம் தனது வட கிழக்கு மாநிலங்களை அடைய முடியாது. இதுகுறித்து இந்தியா நன்கு உணர்ந்தே உள்ளது. இழுபறியில் உள்ள டோக்லாம் எல்லைப்பகுதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், அப்பகுதியை சீனா வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சீனாவை தொடர்ந்து எதிரி நாடாக சித்தரிப்பதன் மூலம், மக்களின் உணர்வுகளை தூண்டி இந்திய அரசியல்வாதிகள் அதிக ஓட்டுகள் பெறுகின்றனர். ராணுவ அதிகாரிகள் பெரும் நிதி பெறுகின்றனர், ஊடகங்கள் பணம் சம்பாதிக்கின்றன. மேதைகள் பிரபலமாகின்றனர்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ஷிங்சன். "சீனாவை இந்தியா தொடர்ந்து எதிரி நாடாக சித்தரிக்கிறது. இது அளவுக்கு மீறும் போது, சீனா நிஜமாகவே இந்தியாவின் எதிரி நாடாக மாற வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கவும் செய்கிறார் அவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close