[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பிய சவுதி பெண் விடுவிப்பு

release-of-the-saudi-woman-who-voiced-against-permit-of-men

சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் செயற்பாட்டாளர் மரியம் அல் ஒட்டைபி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 100 நாட்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். தனது தந்தையின் வீட்டிலிருந்து தப்பி தனித்து வாழ முயற்சி செய்ததால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். பாஸ்போர்ட் பெருவதற்கு விண்ணப்பிப்பது, வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, திருமணம் செய்து கொள்வது, சிறையிலிருந்து வெளிவருவது உள்ளிட்‌ட செயல்களுக்கு ச‌வுதி பெண்கள் ஆண்களின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற முறை அந்நாட்டில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இந்த அடக்குமுறைக்கு எதிராக மர்யம் அல் ஒட்டைபி சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வந்ததால் அவர் அந்நாட்டு மக்களிடம் பிரபலமான நபராக அறியப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close