[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

வடகொரியாவை மிரட்டிய அமெரிக்க விமானப்படை

us-bombers-fly-over-korean-peninsula-for-threat

ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த பி-1பி ரக போர் விமானங்கள் வட கொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அந்நாட்டின் மேல் பறந்தன.

ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு பி-1பி ரக போர் விமானங்கள் நேற்று வட கொரியா கடல் எல்லைக்கு மேலே வட்டமிட்டு பறந்ததாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close