[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
உலகம் 27 Jul, 2017 05:48 PM

திருநங்கைகளுக்குத் தடை: ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்த ஃபேஸ்புக், கூகுள்

ban-on-transgender-facebook-google

ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக், நாட்டுக்காக சேவை செய்யும் அனைவருக்கும் நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இதில், யாருக்கு பாரபட்சம் காட்டினாலும், அது நமக்கே பின்னடைவு என்று பதிவிட்டுள்ளார். ராணுவத்தில் திருநங்கைகளின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூகுள் நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். மேலும், ராணுவத்தில் திருநங்கைகளும் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார். 

திருநங்கைகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், நாட்டுக்கு சேவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபமா, ராணுவத்தில் திருநங்கைகளும் பணிபுரியும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்திருந்தார். இந்த சட்டத்தை மாற்ற உள்ளதாகக் கூறியுள்ள தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திருநங்கைகள் ராணுவத்தில் பணிபுரிய அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close