[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மாலத்தீவு சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக நவாஸ் ஷெரீப் 

nawaz-sharif-is-special-guest-at-maldives-independence-day

மாலத்தீவு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க உள்ளார். 

ஜூலை 26ல் நடைபெறும் அந்நாட்டின் 52ஆவது சுந்திர தின விழாவில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா கயூமின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக மாலத்தீவுகளுக்கு செல்லும் நவாஸ் ஷெரீப், அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. நவாஸ் ஷெரிபின் வருகையால் மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட இருநாடுகள் உறவு மேலும் பலப்படும் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close