[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

பாகிஸ்தான் பிரதமராகும் நவாஸ் ஷெரீப் சகோதரர்?

if-nawaz-sharif-disqualified-his-brother-shehbaz-sharif-to-be-new-pakistan-pm-report

பனாமா ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அவரது இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருக்கும் ஷாபாஸ், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எனவே தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றிபெறும் வரை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் கவாஜா ஆசிப், 45 நாட்களுக்கு இடைக்கால பிரதமராகப் பதவியேற்பார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவு பாகிஸ்தான் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் உறவினர்கள் உள்பட பலர் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக பனாமா ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சிறப்பு புலனாய்வுக் குழு, நவாஸ் ஷெரீபுக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நவாஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்து உத்தரவிடும் என்று தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close