[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

லிபியாவில் காவலர் பயிற்சிப் பள்ளியில் குண்டு வெடித்ததில் 65பேர் உயிரிழந்ததாக தகவல்

at-least-65-killed-in-bomb-attack-on-libya-police-training-center

லிபியாவில் காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Zliten நகரில் உள்ள பயிற்சிப் பள்ளியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிபியாவிற்கான ஐநா சிறப்புத் தூதர் மார்ட்டின் கோப்ளர், காவலர் பயிற்சி பள்ளியில் நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும், இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லிபியா மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மம்மர் கடாபியின் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தளமாக இருந்த அல்-ஜக்ஃபால் பயிற்சி மையத்தில் நிகழ்ந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு திரிபோலி மற்றும் மிஸ்ரட்டா நகர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பபட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தலைமையில் இயங்கி வரும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதல் நடந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்ட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. லிபியாவில் 2011ஆம் ஆண்டில் மம்மர் கடாபி ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. தற்போது அங்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close