[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

சேர்த்து வையுங்க... இல்ல தற்கொலை செஞ்சிப்போம்

unique-marriage-in-indonesia

இந்தோனேசியாவில் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியதால் 16 வயது பையனுக்கும், 71வயது மூதாட்டிக்கும் அவரது வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரோஹாயா, 71 வயதாகும் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிலமாத் ரயாதி என்ற சிறுவனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது. இது தெரிய வந்த இருவரின் வீட்டாரும் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மூதாட்டியும் சிறுவனும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர். இதனால் பயந்துப்போன இருவீட்டாரும் சிறுவனுக்கும் மூதாட்டிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இருவருக்குள் இருக்கும் காதலுக்கு ஆதாரமாக இருவரில் யார் முதலில் இறந்தாலும் மற்றொருவரும் இறந்துவிடுவோம் எனவும் திருமணத்திற்கு முன்பாக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர். மணமகள் ரோஹாயா இதற்கு முன்பு இருமுறை கணவனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close