[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அதிஷ்டத்திற்காக நாணயங்களை விமான என்ஜின் மீது வீசிய 80 வயது பெண்

coins-thrown-into-plane-engine-by-elderly-passenger-for-luck

சீனாவில் அதிஷ்டத்திற்காக விமானத்தின் என்ஜினில் சில்லரை நாணயங்களை 80 வயது பெண் ஒருவர் வீசி எறிந்ததால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

சீனாவின் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 150 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தில் ஏறுவதற்காக 80 வயதான சீனப் பெண் ஒருவர் விரைந்து கொண்டிருந்தார். அப்போது அவர் விமானத்தின் என்ஜினைக் குறிவைத்து, சரமாரியாக நாணயங்களை வீசத் தொடங்கினார். இப்படி அவர் 9 நாணயங்களை வீசினார். அவற்றில் ஒரு நாணயம் என்ஜின் மீது விழுந்தது. இந்தப் பெண்ணின் செயல் மீது சந்தேகம் கொண்ட சக பயணி ஒருவர் விமான நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

தனது கணவர், மகள், மருமகன் ஆகியோருடன் செல்லவிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரணைக்காக பிடித்துச்சென்றனர். அது மட்டுமல்ல, விமானத்தில் இருந்த 150 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு விமானம் பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக, விமானத்தின் என்ஜின் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என சான்று அளிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், தனது குடும்பத்தாரும் பத்திரமாக பயணம் செய்வதற்காகத்தான் விமானத்தின்மீது நாணயங்களை வீசியதாக தெரிவித்தார். அதாவது, அவர் இப்படி நாணயங்களை வீசி பிரார்த்தனை செய்தால் பயணம் பத்திரமாக அமையும் என்ற மூட நம்பிக்கையில் இந்தக் காரியத்தை செய்துள்ளார். அந்தப் பெண், புத்த மதத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியில் 5 மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close