[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ரஷ்ய கடற்படையில் டால்பின்கள்

russia-s-military-is-recruiting-dolphins-and-their-mission-is-a-mystery

ரஷ்ய கடற்படையில் டால்பின்களைச் சேர்க்க அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அறிவிப்பை ராணுவ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு, அந்த டால்பின்களுக்கு பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ளது.

மூன்று ஆண் டால்பின்கள் மற்றும் 2 பெண் டால்பின்கள் என மொத்தம் 5 டால்பின்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஷ்ய ராணுவம், அவற்றுக்கு விலையாக 24 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நிர்ணயம் செய்துள்ளது.

கடற்படையில் சேர உள்ள டால்பின்களுக்கு சரியான பல் வரிசையும், எட்டு அடி நீளமும் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், டால்பின்கள் என்ன வேலைக்காக கடற்படையில் சேர்க்கப்படுகின்றன என்ற தகவலை ரஷ்ய ராணுவம் வெளியிடவில்லை.

டால்பின்களுக்கே உரித்தான பிரத்யேக ஒலி உணர்வு திறன் மற்றும் மோப்ப சக்திக்காக அமெரிக்க கடற்படை மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் படைகள் அவற்றைத் தங்கள் படைகளில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close