[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ஒசாமாவின் கோட்டையை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்

islamic-state-says-it-has-taken-tora-bora-bin-laden-s-afghan-hideout

ஆப்கானிஸ்தானில் அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎஸ் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட ஆடியோ பதிவில், "ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப்பகுதியில் ஐஎஸ் கொடி பறக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கிராமவாசிகளை அவர்களது இல்லத்திலேயே இருக்குமாறும் ஐஎஸ் இயக்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “தாலிபன்களுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே ‘தோரா போரா’ மலையைக் கைபற்றுவது தொடர்பாக கடும் சண்டை நடைபெற்றது. தோரா போரா மலையைக் கைபற்றியது யார் என்று உறுதிப்படுத்த முடியவில்லை" என்றனர்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் ‘தோரா போரா’ மலைப் பகுதியைக் கைப்பற்றுவதில் ஐஎஸ் இயக்கத்துக்கும், தாலிபன்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close