[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

லண்டன் 24 மாடி தீ விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

london-fire-latest-grenfell-tower-death-toll-rises-to-17-as-theresa-may-orders-public-inquiry

லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக்  குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எனவே வேகமாக பற்றி எரிந்த தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 5 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தீ விபத்தில் உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் தீயில் கருகிய கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தெரசா மே இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் எரிந்ததால் வீடுகளை இழந்து பரிதவித்த மக்கள், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லண்டனைச் சேர்ந்த பிரபல பாடகி அடீல் தன் கணவருடன் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாடகி ரீட்டா ஓராவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நன்கொடைகளாக வழங்கப்பட்ட ஏராளமான பொருட்களை வகைப்படுத்தி விநியோகம் செய்வதற்கும் ரீட்டா உதவி செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close