[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

எதிர்க்கட்சித் தலைவர் கைது - வெடித்தது போராட்டம்

alexey-navanly-arrested

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நாவன்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அலெக்சியின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. நாவன்லி ஆதரவாளர்கள் சில பகுதிகளில் வன்முறைகளிலும் ஈடுபட்டதால், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 நாட்கள் தொடர்ந்து அலெக்சி சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அவரின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Alexey navanlyRussiaAnticorruption
Advertisement:
Advertisement:
[X] Close