[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மல்லையா வழக்கு: ஜூன் 13 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத்திவைத்தது

vijay-mallya-england-case-postponed

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை ஜூன் 13 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு கடனை திருப்பிச் செலுத்தாதவர் தொழில் அதிபர் விஜய் மல்லையா. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

லண்டனில் தங்கி இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் இந்தியா சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் அவர் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், மல்லையாவை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவில் இருந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் 4 அதிகாரிகள் லண்டன் சென்றனர். இந்திய அதிகாரிகள் சார்பில், பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள் அமைப்பு நீதிமன்றத்தில் வாதாட உள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விசாரணையானது ஜூன் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close