[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயு தாக்கியதில் 18 மரணம்

china-coal-mine-accident

சீனாவில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயு தாக்கி 18 பேர் மரணமடைந்துள்ளனர், மேலும் 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆழமான ஒரு பகுதியில் மேலும் தோண்டியபோது, பூமியின் அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் 37 பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உள்ளே சிக்கியிருந்த மேலும் சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் 18 இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தேவையான பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காததால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. சுரங்கங்களின் தரத்தை உயர்த்தும் விதமாக பழைய மற்றும் சிறிய சுரங்கங்களை மூடி சீன அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் விபத்துக்களை தவிர்க்க முடியவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close