[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அடக் கொடுமையே! உயிரை காவு வாங்கிய கத்தி விளையாட்டு!

immortal-psychic-stabs-himself-in-the-heart

பொதுமக்கள் முன்பு கத்தியால் சாகசம் செய்தவர், தவறுதலாகக் கத்தி குத்தியதில் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் தெப்ரிட் பாலி (25). அங்குள்ள சியாங் மாய் என்ற இடத்தில், முன்னோர்களின் ஆவிக்கு மரியாதை செய்யும் விதமாக, சில சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது நீண்ட கத்தியால் நெஞ்சில் குத்தினார். அது உடைந்தது. இதையடுத்து பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால், அந்த ஆச்சரியம் அதிக நேரம் நீடிக்கவில்லை. பாலி, மீண்டும் நெஞ்சில் கத்தியை வைத்து வேகமாக அழுத்தியபோது அது ஆழமாக நெஞ்சுக்குள் இறங்கிவிட்டது. விளையாட்டு வினையானதை அடுத்து, இரத்த வெள்ளத்தில் துடித்தார் பாலி. அவரை, அங்குள்ளவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close