JUST IN
 • BREAKING-NEWS வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: ஸ்டாலின்
 • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
 • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஆதரவு தெரிவிக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சரவை நன்றி
 • BREAKING-NEWS பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
 • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர் மீராகுமார்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு
 • BREAKING-NEWS சபாநாயகர் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS கடன்களை தள்ளுபடி செய்வது என்பது நிரந்தர தீர்வாகாது: வெங்கய்ய நாயுடு
உலகம் 20 Mar, 2017 04:43 PM

தாயின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள்: 7 வயது சிறுவன் கோரிக்கை

Cinque Terre

தனது தாயாரை அடக்கம் செய்த கல்லறையிலேயே, தம்மையும் அடக்கம் செய்யுமாறு கூறியுள்ள, 7 வயது சிறுவனின் கோரிக்கை, சமூக வலைதளங்கள் மூலம், உலகை உலுக்கும் வேண்டுகோளாக மாறியிருக்கிறது.

போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பியோட் குவாஸ்நீ-அக்னீஸ்கா தம்பதி. இவர்களது திருமணம் 2009ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளில் தங்க குழந்தையாக, ஃபிலிப் பிறந்தான். அவனுக்கு சற்று விவரம் தெரிய தொடங்கியிருந்த நிலையில், ஃபிலிப்பின் தாயார் அக்னீஸ்கா, புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தார். தாயின் பிரிவு சிறுவனை அணுகா வண்ணம், அவனது தந்தை பியோடர் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், 7 வயதான சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை சோதித்த மருத்துவர்கள், ஃபிலிப்பிற்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறினர். அழகுச் சிறுவனாக இருந்த ஃபிலிப்பின் உடல் மெலிய தொடங்கிய நிலையில், லண்டனுக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார் அவனது தந்தை பியோட். லண்டனில் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டான். இங்கு அவனுக்கு கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளித்தும் ரத்த புற்றுநோய் குணமாகவில்லை. இந்த நிலையில், தனது மரணத்தை உணர்ந்திருக்கும் சிறுவன், தான் இறந்தால், தனது தாயாரை அடக்கம் செய்த கல்லறையிலேயே தன்னையும் அடக்கம் செய்யுமாறு கூறினான். இம்மாதம் முதல் வாரத்தில் மருத்துவர்கள் கைவிரித்துவிட, வலி நிவாரணி மாத்திரைகளோடு, இறுதி பயணத்தில் இருக்கிறான் சிறுவன் ஃபிலிப்.

சிறுவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவனது தந்தை பியோட் முடிவு செய்தபோது, அதற்கு 6ஆயிரத்து 500 பவுண்ட் நிதியுதவி தேவைப்பட்டது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில், பரவியது. சிறுவனின் இறுதி ஆசையை படித்து உருகிய கொடையாளார்கள், இதுவரை 37 ஆயிரம் பவுண்டு நிதியை வழங்கியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads