[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

போதை விமானி கைது

airline-pilot-jailed-for-being-drunk

ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்ஸிக்கு போதையில் விமானம் இயக்க முயன்ற விமானியை, போலிசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் கார்லோஸ் ராபர்டோ லிகோனா. இவர் United Airlines நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்காட்லாந்திலிருந்து நியூஜெர்சிக்கு செல்லும் விமானத்தை இயக்க இவர் வந்தார். 141 பயணிகள் அதில் இருந்தனர். விமானத்தில் ஏற முயன்ற கார்லோஸ் அதிகமான குடி போதையில் இருந்தது தெரியவந்தது. அவரைப் சோதித்த பாதுகாப்பு அதிகாரிகள், இரத்தத்தை சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு அதிகம் குடித்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கார்லோஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பத்து மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தது. அத்துடன் போதையில் விமானம் ஓட்ட முயன்ற கார்லோஸ் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close