[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

பிரான்ஸ் அதிபராக ஒபாமா... மக்கள் கோரிக்கை?

group-of-parisians-launch-obama-2017-french-presidential-campaign

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, தங்கள் நாட்டுக்கு அதிபராக வர வேண்டும் என பிரான்ஸ் நாட்டின் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஒபாமா - 2017 என்ற வாசகத்துடன் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். நடைமுறையில் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும், இந்த பரப்புரை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் நம்பிக்கையான தலைவர்கள் குறைந்துவிட்டனர் என்பதைக் காட்டும் வகையில் இந்தப் பரப்புரை அமைந்திருப்பதாகவும் கருத்து உருவாகியிருக்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி, தீவிர வலதுசாரியான லே பென், அதிபர் தேர்தலில் முந்துவதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close