[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ட்ரம்ப்பின் தடை உத்தரவு கூகுள் நிறுவன ஊழியர்களை பாதித்துள்ளது.... சுந்தர் பிச்சை

google-ceo-says-employees-to-be-affected-by-trumps-immigration-order

இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் குடியேற விதிக்கப்பட்டுள்ள தடை கூகுள் நிறுவன ஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளது என கூகுள் தேடுதல் இணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் குடியேற கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். ட்ரம்பின் நடவடிக்கைக்கு ஈரான், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக உள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் கூகுள் தேடுதல் இணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியருமான சுந்தர் பிச்சை ட்ரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருக்கும் தனது ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இந்த நாடுகளில் மட்டும் 187 கூகுள் நிறுவன ஊழியர்களின் வேலை பாதிக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜெர்னலுக்கு இமெயில் மூலம் சுந்தர் பிச்சை அளித்துள்ள பேட்டியில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த உத்தரவு எங்கள் பணியாளர்களை மிகவும் பாதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அறிவுசார் பணியாளர்களை கொண்டு வருவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close