உலகின் பல்வேறு நாடுகளில் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்து மற்றும் சில தீவுகளில் 2017 ஆம் ஆண்டு பிறந்தது. தலைநகர் ஆக்லாந்தில் நள்ளிரவின் இறுதி நொடிகள் முடிந்து புத்தாண்டு பிறந்ததும் வாணவேடிக்கைகள் இரவை பகலாக்கின. இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. கவுண்டன் முடிந்ததும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். நியூசிலாந்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. தலைநகர் கான்பெராவில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சிட்னியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். ஆஸ்திரேலியா முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்?
“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..!