[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ சிலைக்கு தடை

fidel-castro-statue-banned-in-cuba

கியூபாவில், மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் சிலைகளை வைக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பொது இடங்களுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை சூட்ட தடை விதிக்கப்பட்டிருப்பதாக கியூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். தனது பெயரை பொது இடங்களுக்கு சூட்டவோ, சிலைகள் அமைக்கவோ ஃபிடல் காஸ்ட்ரோ விரும்பாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவரது கருத்துகளை பின்பற்றினாலே போதுமானது என்றும் ரவுல் காஸ்ட்ரோ விளக்கமளித்துள்ளார்.

கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி காலமானார். காஸ்ட்ரோ மறைவை அவரது சகோதரரும், கியூப அதிபருமான ரால் காஸ்ட்ரோ அரசு தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு அறிவித்தார். ராணுவ ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி செய்து கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை மலர செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. இந்த புரட்சியின் போது சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து செயல்பட்டனர்.1959 முதல் 2008-ம் ஆண்டு வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கியூபாவை ஆட்சி செய்து வந்த பிடல் காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close