[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பாக். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெனாசிர் பூட்டோ மகன்

bilawal-bhutto-to-take-political-plunge

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியை (பிபிபி) சேர்ந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் அரசியலில் பிரபலமான பெண் அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்த பெனாசிர் பூட்டோ ராவல் பிண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெனாசிர் பூட்டோவின் எதிர்பாராத இழப்பால் நிலைகுலைந்துபோன அவரது கணவரும், முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில் அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பெனாசிர் பூட்டோவின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பிலாவல் பூட்டோ நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஆசிஃப் அலி சர்தாரி அறிவித்துள்ளார். பிலாவல் தேர்தலில் போட்டியிடும் வண்ணம் பிபிபி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close