[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

எனது கருத்துகளைத் திருடிவிட்டனர்...பாக். குடியரசுத் தலைவர் மாளிகையைக் குற்றம்சாட்டும் 11 வயது மாணவன்

class-vi-student-in-pakistan-sues-president-house-over-stealing-his-speech

பாகிஸ்தான் குடியரசுத்தலைவர் மாளிகை, தனது கருத்துகளைத் திருடிவிட்டதாக 6ம் வகுப்பு மாணவர் ஒருவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக இஸ்லாமாபாத் ஜூனியர் கல்லுரியில் 6ம் வகுப்புப் பயிலும் மாணவர் முகமது சபீல் ஹைதர் தனது தந்தை வழியாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முகமது அலி ஜின்னாவின் 141ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடியரசுதலைவர் மாளிகையில் பேசுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கான முன்னோட்டமாக நான் பேசிய நிகழ்வு வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்தநிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் டிசம்பர் 22ம் தேதி நடைபெறுவதாகவும், பின்னர் அந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் டிசம்பர் 25ம் தேதியும் ஒளிபரப்பபடுவதாகவும் இருந்தது. ஆனால், குறிப்பிட்ட தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற எனக்கு பேச அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம் நான் பேசுவதற்காக வைத்திருந்த குறிப்புகளை 10ம் வகுப்புப் பயிலும் ஆயிஷா இஸ்தியாக் பேசினார். அனுமதியின்றி எனது கருத்துகளைத் திருடிய குடியரசுத் தலைவர் மாளிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சட்டப்படி ஒருவரது அனுமதியின்றி அவரது கருத்துகளைப் பயன்படுத்துவது குற்றமாகும். இதற்காக சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டத்தில் இடமுண்டு. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close