[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட சிரியா

siria-war-ends

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியாவின் அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நாட்டு அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அலெப்போ பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் அரசுப் படைகள் ஒரு புறமும் கிளர்ச்சியாளர்கள் மற்றொருபுறமும் அலெப்போ நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் முதல் அரசுப் படைகள் தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதலில் இந்தப் பகுதி முழுவதும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. மேலும் மறைவிடங்களில் தங்கியிருந்த கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்பங்களும் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுவதாகவும் சிரியாப் போரில் இது மிக முக்கியத் திருப்புமுனை என்றும் ராணுவம் கூறியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரால் சிரியா நாடே உருக்குலைந்து போயிருக்கிறது. அழகிய அலெப்போ நகர் தற்போது வெறும் கட்டிட இடிபாடுகளின் குவியலாக மாறி இருக்கிறது. அமைதியாக காணப்பட்ட அலெப்போ நகர தெருக்கள், கிளர்ச்சியாளர்களாலும் அரசு படைகளாலும் தாக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close