[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

வெடிக்க தயாராக உள்ள எரிமலைகள்.. நடக்கப்போவது என்ன..?

campi-flegrei-supervolcano-dangerously-close-to-hitting-a-critical-pressure-point

இத்தாலியில் உள்ள கேம்பி பிளக்கெரி எரிமலையானது வெடிக்க தயாரான நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் நப்லி நகரத்தில் 2005 ஆம் ஆண்டு வரையில் உறங்கும் நிலையில் இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது 2012 ஆம் ஆண்டு முதல் உயிர் பெற்று மஞ்சள் நிற எரிமலைக் குழம்புகளை உமிழ தொடங்கியுள்ளது. இது தற்போது வெடிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் இதனால் மிக பெரிய ஆபத்து நிகழ உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை ஆய்வியல் வரலாற்றில் முதன்முறையாக கேம்பி பிளக்கெரி எரிமலையின் மாக்மா எனும் தீக்குழம்பு திரவம் வெளிவர தொடங்கியுள்ளது. அப்பகுதியில் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்தால் சுமார் 5 லட்சம் பேர் பாதிப்படையும் நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி கேம்பி பிளக்கெரி எரிமலைக்கு அருகில் விசுவியஸ் எரிமலையையும் காணப்படுவதால் கேம்பி பிளக்கெரி எரிமலை வெடித்தால் புவியியல் ரீதியில் பெரும் பேரழிவு நிகழும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எரிமலை வெடிப்பு பகுதிக்கு அருகில் சுமார் 500000 மக்கள் வசிக்கின்றனர். ஐரோப்பா கண்டத்தில் கடந்த 39000 ஆண்டுகளுக்கு முன் 1538- ஆம் ஆண்டு கேம்பி பிளக்கெரி எரிமலை வெடிப்பு நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close