[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ரஷ்ய தூதர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்... ரஷ்ய - துருக்கி குழு விசாரணை

russian-diplomat-killed-russian-turkish-committee-of-inquiry

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துருக்கி சென்றுள்ள 18 பேர் கொண்ட ரஷ்ய விசாரணை குழு, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தது. இந்த தாக்குதல் தனி நபரால் மட்டுமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என விசாரணை அதிகாரிக‌ள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அய்தின்டாஸூக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆண்ட்ரே கார்லோவின் உடல் மாஸ்கோ கொண்டு செல்லப்பட்டது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கார்லோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக துருக்கி தலைநகர் அங்காராவில் புகைப்படக் கண்காட்சியில் பேசிக் கொண்டிருந்த ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவை, துருக்கி காவல்துறையைச் சேர்ந்த மெவ்லட் மெர்ட் அய்தின்டாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துப்பாக்கியால் சுடும் போது சிரியா மற்றும் அலெப்போவை மறக்க வேண்டாம் என்று மெவ்லட் மெர்ட் முழக்கமிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் மெவ்லட் மெர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close