[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

போதைக்காக குளியல் எண்ணையைக் குடித்த 25 பேர் பலி

25-die-in-siberia-after-drinking-bath-oil-for-alcoholic-kicks

மது போதை தரும் என்றெண்ணி குளியலுக்குப் பயன்படுத்தும் எண்ணையைக் குடித்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய நகரமான இர்குட்ஸ்க்கில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களே அதிகம். மது போதையைத் தரும் என்ற ஆசையில் விலை மலிவாக உள்ள குளியல் எண்ணையைக் குடித்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சைபீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை 33-ஐக் கடந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பொருட்கள் அந்த குளியல் எண்ணைய் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் டிமிட்ரி மெத்மதேவ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து 2,000 லிட்டருக்கும் அதிகமான குளியல் எண்ணைய் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close